சுடச்சுட

  

  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் ராமநாதபுரம் அரண்மனை வாயில் முன்பாக கலை இலக்கிய இரவு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  துவக்க விழாவிற்கு வரவேற்புக்குழுத் தலைவர் கண் மருத்துவர் பி.சந்திரசேகரன் தலைமை வகித்து அரசுப்பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவியருக்கு விருதுகள், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

  அமைப்பின் கிளைத் தலைவர் நா.அறிவழகன், கிளைச் செயலர் தே.முத்துப்பாண்டி, பொருளாளர் கோ.முரளிமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனோத்துவ நிபுணர் அசரப்அலி வரவேற்றார். அமைப்பின் மாவட்டத் தலைவர் சித்த மருத்துவர் வான்தமிழ் இளம்பருதி, மாவட்டச் செயலர் அ.கோபாலகிருஷ்ணன், பொருளாளர் ராஜா ஆகியோர் கலை இலக்கிய இரவு நடத்தப்படுவதன் நோக்கம் குறித்து பேசினர்.

  கவிஞர் நந்தலாலா தமிழ் மொழியின் முக்கியத்துவம் என்ற தலைப்பிலும், மதுக்கூர் ராமலிங்கம் சுயநலமின்றி வாழ்ந்த தலைவர்கள் என்ற தலைப்பிலும் பேசினர். முகவை அலைகள் குழுவினரின் சார்பில் பாடகர்கள் ராஜ்குமார், கோமதி, தமிழ்க்கனல், கருணாமூர்த்தி, துரைப்பாண்டி ஆகியோர் கிராமியப் பாடல்களைப் பாடினர்.

  நிகழ்ச்சியில் புதுகை பூபாளம் கலைக்குழுவினரின் நகைச்சுவைச் சொற்பொழிவு, தருமபுரி கலைக்குழுவினரின் தப்பாட்டம், சல்லிக்குச்சி ஆட்டம், கிழவிகுளத்தான் சிறுவர் கலைக்குழுவினரின் நரிக்குறவர் ஆட்டம், லிம்போ கேசவனின்

  நெருப்பு நடனம், திருத்தங்கல் கற்குவேல்ராஜின் சிலம்பாட்டம் ஆகியன நடைபெற்றன. வரவேற்புக் குழுவின் பொருளாளாளர் ஹெச்.ஜான் சௌந்தர்ராஜ் நன்றி கூறினார்.

  பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் பி.கே.மணி, சி.ஐ.டி.யு. நிர்வாகி எம்.சிவாஜி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் கலையரசன், அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் விஸ்வநாதன், கண்ணகி கமலாராகுல், தமிழ்ச்சங்க பொருளாளர் கா.மங்களசுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai