சுடச்சுட

    

    ராமநாதபுரத்தில் மன்னரின் வாரிசுகள் ஆர்ப்பாட்டம்

    By ராமநாதபுரம்  |   Published on : 06th October 2014 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரத்தில் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் வாரிசுகள் ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    ஆர்ப்பாட்டத்திற்கு வாரிசுகள் சங்கப் பொருளாளர் பி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். செயலர் ஜி.கோபால், துணைத் தலைவர்கள் ஜெ.வி.சி.நேதாஜி, கௌரவத்தலைவர் சி.மங்களநாததுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் எதிர்புறம் உள்ள வளர்ச்சித்துறை மகால் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் சங்க பொதுக்குழு உறுப்பினர் மல்லல்.முருகேசன்,உறுப்பினர்கள் அங்குச்சாமி,ராஜேஸ்வரி நாச்சியார், காசிநாதன் ஆகியோர் உள்பட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இருந்து வாரிசுகள் பலரும் திரளாக கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai