சுடச்சுட

    

    வன்முறையை தூண்டும் வகையில் சுவரொட்டி ஒட்டியதாக 5 பேர் கைது

    By பரமக்குடி  |   Published on : 06th October 2014 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமக்குடி அருகே உள்ள ஊரக்குடி கிராமத்தில் முளைப்பாரி திருவிழா நிகழ்ச்சிக்கு வன்முறையைத் தூண்டும் வகையில் சுவரொட்டி ஒட்டியதாக அக்கிராமத்தைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    பரமக்குடி ஒன்றியம் வழிமறிச்சான் குரூப்பைச் சேர்ந்த ஊரக்குடி கிராமத்தில் முளைப்பாரி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழா நிகழ்ச்சிக்காக அக்கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார்(36), மணிகண்டன்(29), கருப்பையா(52), தர்மலிங்கம்(36), ராமச்சந்திரன்(40), பாலகிருஷ்ணன்(24), முருகேசன், தியாகராஜன் ஆகியோரால் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளில் வன்முறையை தூண்டும் வகையிலான வாசகங்களும், படங்களும் இருந்ததாம்.

    இதுகுறித்து பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் வழிமறிச்சான் குரூப் கிராம நிர்வாக அலுவலர் பூப்பாண்டி அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ 8 பேர் மீதும் வழக்குப் பதிந்து மணிகண்டன், கருப்பையா, தர்மலிங்கம், ராமச்சந்திரன், பாலகிருஷ்ணன் ஆகிய 5 பேரை கைது செய்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai