சுடச்சுட

  

  தேவகோட்டையில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி நகர்மன்றத் தலைவர் தலைமையில் கையெழுத்தியக்கம் தொடங்கப்பட்டது.

  தேவகோட்டையில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி தேவகோட்டை நகர்மன்றத் தலைவர் சுமித்ரா ரவவிக்குமார் தலைமையில் கையெழுத்து இயக்கம் தேவகோட்டை நகராட்சி முன் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

  நிகழ்ச்சிக்கு காரைக்குடி தொகுதி செயலர் சொர்ணலிங்கம், மூத்த வழக்குரைஞர் ராமநாதன், மாவட்ட இளைஞரணி செயலர் தேர்போகி பாண்டி, காரைக்குடி நகர்மன்றத் தலைவர் கற்பகம் இளங்கோ, முன்னாள் மாவட்டச் செயலர் கருப்பையா, கல்லல் ஒன்றிய தலைவர் அசோகன், கீழவயல் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியன், சிலோன் பாலு, சிவக்குமார், சரவணன், ராதா, வீரப்பன், சுப்பம்மாள், பாண்டியம்மாள், சேதுபாண்டி, நகர, ஒன்றிய செயலர்கள் மற்றும் பலர் கையெழுத்திட்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai