சுடச்சுட

    

    அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன பணியாளர்களுக்கு கடன் முறையில் கதர் விற்பனை: ஆட்சியர்

    By ராமநாதபுரம்  |   Published on : 07th October 2014 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசுப் பணியாளர்களுக்கும், தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் கதர் ரகங்கள் கடன் முறையில் விற்பனை செய்யப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம் கதர் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்து அவர் மேலும் கூறியதாவது:

    தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் கிராமப் புற கைவினைஞர்களைக் கொண்டு நூற்பு மற்றும் நெசவுத் தொழில் மூலமாக பலருக்கும் முழுநேரம் மற்றும் பகுதி நேர வேலை வாயப்பு வழங்கியும் செயல்பட்டு வருகிறது. பொருளாதாரத்தில் நலிவடைந்த, வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் எழை, எளிய மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கதர் கிராமத் தொழில் வாரியம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாரியம் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு அண்ணா, பெரியார், காமராஜர் மற்றும் அண்ணல் காந்தியடிகள் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டும் மத்திய மற்றும் மாநில அரசுகள் கதர் ரகங்களுக்கு 30 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கிட அனுமதி வழங்கியுள்ளன.

    மேலும் அரசுப் பணியாளர்களும், தனியார் நிறுவன ஊழியர்களும் கதர் ரகங்கள் கடன் முறையில் வாங்கிப் பயன்பெறும் வகையில் அரசால் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. மதுரை கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள கதர் விற்பனை நிலையங்களில் கதர் நூல் மற்றும் கதர் துணிகள் உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    கடந்த ஆண்டு மதுரை கட்டுப்பாட்டில் செயல்படும் கதர் அங்காடிகளுக்கு ரூ.25 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கதர் ரகங்கள் விற்பனையானது. இந்த ஆண்டும் ரூ.25 லட்சத்துக்கு குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அரசு வழங்கியுள்ள தள்ளுபடி சலுகைகளை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி, கதர், பட்டு, பாரிஸ்டர், உல்லன் ரகங்கள், ரெடிமேட் சட்டைகள், மெத்தைகள், தலையணைகள் ஆகியவற்றை வாங்கி பயன்பெறுமாறும் ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai