Enable Javscript for better performance
ஓட்டமடம் காளியம்மன் கோயிலில் அதிமுகவினர் ஹோம பூஜை- Dinamani

சுடச்சுட

    

    ஓட்டமடம் காளியம்மன் கோயிலில் அதிமுகவினர் ஹோம பூஜை

    By பரமக்குடி,  |   Published on : 07th October 2014 12:14 AM  |   அ+அ அ-   |    |  

    ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றிய அதிமுக சார்பில் திங்கள்கிழமை சத்திரக்குடி அருள்மிகு ஸ்ரீஓட்டமடம் காளியம்மன் கோயிலில் சிறப்பு ஹோம பூஜை நடைபெற்றது.

    அன்று காலை 7 மணிக்கு கணபதி பூஜையுடன் துவங்கிய ஹோம பூஜையில் 7 புரோகிதர்கள் மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையிலிருந்து மீண்டு வர வேண்டும் என்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    இதனைத் தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மொட்டையடித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். போகலூர் ஒன்றியக் குழு தலைவர் ஜி. நாகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினர் அ. அன்வர்ராஜா, மாவட்டச் செயலர் ஆர். தர்மர், முன்னாள் அமைச்சர் வ.து. நடராஜன், முன்னாள் மாவட்டச் செயலர் கே.சி. ஆணிமுத்து, கிடாத்திருக்கை கூட்டுறவு சங்கத் தலைவர் சண்முகபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் சந்திரன், வழக்குரைஞர் பிரிவு இணைச் செயலர் என்.ஆர். ராஜேந்திரன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai