சுடச்சுட

  

  கமுதி பகுதி கோயில்களில் நவராத்திரி 9 நாள் உற்சவம் நிறைவு பெற்றது. இதையொட்டி நடைபெற்ற சுவாமி அம்பு விடும் உற்சவத்தில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

  கமுதி சத்திரிய நாடார் உறவின்முறை டிரஸ்டுக்குப் பாத்தியமான முத்துமாரியம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவம் 9 நாள்கள் தொடர்ந்து நடைபெற்றன. தினசரி அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீப ஆராதனை பூஜைகளை தலைமை அர்ச்சகர் ரவி என்ற சிவசுப்பிரமணியம் குருக்கள், உதவி அர்ச்சகர்கள் ராஜரத்தினம் குருக்கள், ரமேஷ் குருக்கள், பரிஜாதகர் நாராயணன் ஆகியோர் நடத்தினர். கடைசி நாள் உற்சவத்தை முன்னிட்டு வெள்ளிக் குதிரை வாகனத்தில் வண்ண மலர் மாலைகள், வண்ண மின் விளக்குகள் அலங்காரத்துடன், அம்மன் பவனி, மகர் நோம்பு திடலில் அம்மன் அம்பு விடும் உற்சவம், வன்னி மரம் நட்டியிருந்த கொட்டகை களைதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உற்சவத்தில் சிறப்பு நாதசுவர கச்சேரி, வாண வேடிக்கை ஆகியவை இடம் பெற்றன.

  தசரா பவனியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் அம்மனுக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. தசரா நிறைவு நாள் உற்சவத்தில் புரட்டாசி மாத முறைகாரர் வெ. முத்துக்குமார் அம்பலகார் ஆர். சக்திவேல் நாடார் மற்றும் முறைகார்கள், பிரமுகர்கள், பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

  உற்சவ ஏற்பாடுகளை முறைகாரர் முத்துக்குமார் நாடார் ஆலோசனையில் நாடார் உறவின் முறை கணக்கர் வாழவந்தான், தண்டலர் அருணாச்சலம், உதவி தண்டலர் சவுந்தரபாண்டியன், கோயில் பணியாளர் காந்தி உள்பட பலரும் கவனித்தனர்.

  கமுதியில் ராமநாதபுரம் சேதுபதி மன்னர் சமஸ்தான, தேவஸ்தானத்துக்குப் பாத்தியமான மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி 9 நாள் உற்சவம் நடைபெற்றது. தினசரி நவகுல மண்டகப்படி உபயதார்கள் சார்பில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை பூஜைகளை அர்ச்சகர் சு. சந்துரு என்ற ராமசுப்பிரமணிய குருக்கள் நடத்தினார். கடைசி நாள் உற்சவத்தை முன்னிட்டு பசும்பொன் தேவர் குடும்பத்தினர் மண்டகப்படி சார்பில் சிறப்பு பூஜை மற்றும் சுவாமி, அம்பாள் பவனி மற்றும் சுவாமி அம்பு விடும் உற்சவம் ஆகியவை நடைபெற்றன. உற்சவங்களில் பசும்பொன் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன், உறவினர்கள் சத்தியமூர்த்தி, ராமச்சந்திரன், பழனி, ரவி என்ற தங்கவேல்

  மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. கே. முத்துவேல், கமுதி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் க.சிங்கம் என்ற முத்துராமலிங்கம், நிலக்கிழார் கே. போஸ், நாராயணபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் க. ராமச்சந்திர பூபதி, பஸ் அதிபர் வி.கே.எம். முருகன், பேரூராட்சி கவுன்சிலர் கே. பாஸ்கர பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். உற்சவ ஏற்பாடுகளை சமஸ்தான திவான், வழக்குரைஞர் மகேந்திரன் ஆலோசனையில் அர்ச்சகர் சந்துரு குருக்கள், கோயில் பணியாளர்கள் கு. ராஜா என்ற பாஸ்கரன், பா. ராஜேந்திர செல்வம், பி. சுகுமாறன், ராம்தாஸ் உள்பட பலரும் கவனித்தனர்.

  கமுதி அருகே அபிராமம் செங்குந்தர் முதலியார் சமூக உறவின்முறைக்குப் பாத்தியமான வள்ளி, தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர் கோயிலில் நவராத்திரி 9 நாள் உற்சவம் நடைபெற்றது. தினசரி இரவு நடைபெற்ற சிறப்பு பூஜைகள், கடைசி நாள் நடைபெற்ற சுவாமி பவனி, சுவாமி அம்பு விடும் உற்சவம் ஆகியவற்றில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். உற்சவ ஏற்பாடுகளை செங்குந்தர் முதலியார் உறவின்முறையினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

  பேரையூர், பெருநாழி, நீராவி, ராமசாமிபட்டி ஆகிய ஊர்களிலும் நவராத்திரி 9 நாள் உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் வழிபாடுகள், சுவாமி பவனி, சுவாமி அம்பு விடும் உற்சவங்கள் நடைபெற்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai