சுடச்சுட

    

    கீழக்கரையில் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை

    By கீழக்கரை,  |   Published on : 07th October 2014 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை திங்கள்கிழமை திடல்களிலும் மசூதிகளிலும் நடைபெற்றன.

    கீழக்கரை தெற்குத் தெரு பள்ளியில் சாதிக் ஆலிம் தலைமையிலும், புதுத்தெரு பள்ளியில் பிலால் ஆலிம் தலைமையிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடுத்தெரு, கிழக்குத் தெரு, வடக்குத் தெரு, பழைய குத்பா பள்ளி, மேலத்தெரு ஆகியவற்றில் தலைவர்கள் முன்னிலையிலும் அப்பள்ளிகளின் இமாம்கள் மசூதிகளிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் 500 பிளாட் பகுதியில் அபூபக்கர் சித்திக், தெற்குத் தெரு பகுதியில் சத்தார் அலி, கிழக்குத் தெரு பகுதியில் நசுருதீனி ஆகியோர் தலைமையிலும், இந்தியன் தவ்ஹீத் ஜமாத் சார்பில் கிழக்குத் தெரு பட்டாணியப்பா அருகிலும் தெற்குத் தெரு பகுதியில் குலிஸ்தான் திடலிலும் சிறப்பு தொழுகைகள் திடல் தொழுகைகளாக நடைபெற்றன. மேலும் தெற்குத் தெரு மஸ்ஜித் அட்ஹாக் கமிட்டி தலைவர் அலிப்தீன் முன்னிலையிலும் சித்திக் ஆலிம் தலைமையிலும் திடல் தொழுகை நடைபெற்றது.

    இத்தொழுகைகளில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு உலக அமைதிக்காகவும், ஒற்றுமைக்காகவும் பிரார்த்தனை செய்தனர். தொழுகை முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai