சுடச்சுட

    

    சாயல்குடியில் அதிமுகவினர் உண்ணாவிரதம்

    By முதுகுளத்தூர்,  |   Published on : 07th October 2014 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாயல்குடி தேவர் சிலை அருகே திங்கள்கிழமை அதிமுகவினர் உண்ணா விரதம் இருந்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

    உண்ணாவிரத போராட்டத்துக்கு முதுகுளத்தூர் சட்டப் பேரவை உறுப்பினர் எம். முருகன் தலைமை தாங்கினார்.

    சாயல்குடி ஒன்றியச் செயலர் ஏ.எஸ்.பி. அந்தோணிராஜ், தொகுதி அதிமுக செயலர் எஸ்.பி. காளிமுத்து, மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் மலைக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர் செயலர் சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார். இதில் மாவட்ட துணைச் செயலர் எம்.வி. குமரையா, கவுன்சிலர் எம். முத்துமாரி, தரைக்குடி கூட்டுறவு சங்கத் தலைவர் பால்பாண்டி, சாயல்குடி வீட்டுவசதி சங்கத் தலைவர் செந்தூர்பாண்டி, ஜெயலலிதா பேரவை தெட்சணாமூர்த்தி, ஒன்றிய இளைஞர் பாசறை செயலர் அரசபாண்டி, ஜெயராமன், சேதுபாண்டி சிக்கல் ஊராட்சி துணைத் தலைவர் அப்துல் ரகுமான் உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai