சுடச்சுட

  

  சாயல்குடியில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு

  By முதுகுளத்தூர்,  |   Published on : 07th October 2014 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சாயல்குடி மற்றும் மாரந்தையில் திங்கள்கிழமை அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா சிறையில் இருந்து விடுதலை பெற வேண்டி அதிமுகவினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.

  கடலாடி ஒன்றியம் மாரந்தையில் ஜெயலலிதா பேரவை சார்பில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. மேலும் பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் மாவட்டச் செயலர் ஆர். தர்மர் தலைமையில் நடைபெற்றது.

  நிகழ்ச்சியில் கடலாடி ஒன்றியக் குழுத் தலைவர் வீ. மூக்கையா, துணைத் தலைவர் பத்மநாதன், ஜெயலலிதா பேரவைச் செயலர் நீதிதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கடலாடி ஒன்றியச் செயலர் என்.கே. முனியசாமி பாண்டியன், ஒன்றிய இளைஞரணி செயலர் எம். சத்தியமூர்த்தி, வழக்குரைஞர் பிரிவு அழகுமுத்து அறியப்பன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  அதேபோல், சாயல்குடியில் நகர் அதிமுக சார்பில் சிவாலயம், பள்ளிவாசல், தேவாலயம் ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டுக்கு கடலாடி ஒன்றியக் குழுத் தலைவர் வீ. மூக்கையா தலைமை தாங்கினார்.

  நகர் அதிமுக செயலர் சுப்பிரமணியன், சாயல்குடி ஒன்றிய செயலர் ஏ.எஸ்.பி. அந்தோணிராஜ், ஜெயலலிதா பேரவை செந்தூர்பாண்டியன், தெட்சிணாமூர்த்தி உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai