சுடச்சுட

  

  எமனேசுவரம் வரதராஜப் பெருமாள் காலனியில் செüராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் 7 நாள் சிறப்பு முகாம் அக்டோபர் 1ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.

  திங்கள்கிழமை சோலைமலை டாக்டர் வரதராஜன் சார்பில் நடைபெற்ற இலவச சித்த மருத்துவ முகாமுக்கு பள்ளியின் பெற்றோர், ஆசிரியர் கழகத் தலைவர் வி.ஜி. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் டி.எஸ். ராஜாராம், கல்விக்குழு தலைவர் எம்.ஆர். சுரேஷ்பாபு, இணைச் செயலர் கே.ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் கே.எஸ். நாகராஜன் வரவேற்றார்.

  முகாமினை அகில இந்திய செüராஷ்ட்ர மத்திய சபை செயலர் என்.கே. பார்த்தசாரதி துவக்கி வைத்துப் பேசினார். முகாமில் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குதல், மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய சமுதாயப் பணிகள், இலவச கண் பரிசோதனை முகாம், கோயில்களில் உழவாரப் பணி, தெருக்கள் சுத்தப்படுத்துதல், எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த நாடகங்கள் நடைபெற்றன. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கே.எஸ். சந்திரசேகரன் நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai