Enable Javscript for better performance
பரமக்குடியில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பரமக்குடியில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்

    By பரமக்குடி,  |   Published on : 07th October 2014 12:29 AM  |   அ+அ அ-   |    |  

    பரமக்குடி ஆர்ச் பகுதியில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி அக்கட்சியின் மருத்துவ அணி சார்பில் மனித சங்கிலி போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    இந்த போராட்டத்துக்கு மாவட்ட மருத்துவ அணி செயலர் எஸ். முத்தையா தலைமை வகித்தார். மக்களவை உறுப்பினர் அ. அன்வர்ராஜா, மாவட்டச் செயலர் ஆர். தர்மர், முன்னாள் அமைச்சர் வ.து. நடராஜன், முன்னாள் மாவட்டச் செயலர்கள் எம்.ஏ. முனியசாமி, கே.சி. ஆணிமுத்து, நகர்மன்றத் தலைவர் எம். கீர்த்திகா, தலைமைக் கழக பேச்சாளர் எம்.கே. ஜமால், மகளிர் அணி செயலர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ச் பகுதியில் துவங்கிய மனித சங்கிலி போராட்டம் கிழக்கே சந்தைக் கடைத் தெரு வரையிலும், மேற்கே ஓம் சண்முகா தியேட்டர் வரையிலும் சங்கிலித் தொடராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் கே. அப்துல்மாலிக், தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் எம். நாகராஜன், கூட்டுறவு நகர் வங்கித் தலைவர் வடிவேல்முருகன், இளைஞரணி ஒன்றிய துணைச் செயலர் பி. முருகேசன், வடமலையான், எம்.ஜி.ஆர். இளைஞரணி அ. யோகமணிகண்டன் உள்பட கட்சி தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai