Enable Javscript for better performance
ராமநாதபுரத்தில் அதிமுக மாணவரணியினர் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரத்தில் அதிமுக மாணவரணியினர் உண்ணாவிரதம்

    By ராமநாதபுரம்,  |   Published on : 07th October 2014 12:28 AM  |   அ+அ அ-   |    |  

    ராமநாதபுரத்தில் அதிமுக மாவட்ட மாணவரணியின் சார்பில் ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    ராமநாதபுரம் அரண்மனை முன் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மாவட்ட மாணவரணி செயலர் வழக்குரைஞர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.

    ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் எஸ்.கே.ஜி.எஸ். சந்தான லெட்சுமி, மாவட்ட மகளிரணி செயலர் கவிதா சசிக்குமார், ஒன்றியச் செயலர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் அ. அன்வர்ராஜா, மாவட்டச் செயலர் ஆர். தர்மர், மாவட்ட அவைத் தலைவர் செ. முருகேசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சுந்தரபாண்டியன், முன்னாள் மாவட்டச் செயலர் ஜி. முனியசாமி, கே.சி. ஆணிமுத்து, எம்.ஜி.ஆர். மன்ற நகர் செயலர் செல்வம், மாணவரணி ராமநாதபுரம் ஒன்றிய இணைச் செயலர் சபரி தயாமதி ஆகியோர் உள்பட ஏராளமானோர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்தில் பங்கேற்ற பலர் கறுப்புச் சட்டை அணிந்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai