சுடச்சுட

  

  பெங்களூர் சிறையிலிருக்கும் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பேரணியாக சென்று பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலி போராட்டங்களை நடத்தினர்.

  அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூர் நீதிமன்றம் தண்டனை விதித்து சிறையில் இருந்து வருகிறார்.

  அதனையொட்டி ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி அதிமுகவினர் ராமேசுவரம் நகர் பகுதிகளில் கண்டன பேரணி நடத்தினர்.

  இதற்கு ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள், ராமேசுவரம் நகர் மன்றத் தலைவர் அர்ச்சுனன் மற்றும் அதிமுக நகர் செயலர் பெருமாள் தலைமை தாங்கினர். எம்,ஜி,ஆர். மன்ற மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலர் கே.கே. அர்சுணன், ராமேசுவரம் நகர் அவைத் தலைவர் பிச்சை, நகர் மன்ற துணைத் தலைவர் குணசேகரன், மண்டபம் பேரூராட்சி தலைவர் தங்கமரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியைத் தொடர்ந்து பழைய காந்தி சிலை பகுதி, திட்டக் குடி பகுதி, மேலத் தெரு, போத்தார் சத்திரம் உள்பட பல இடங்களில் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரியும் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  அதன் பின்னர் ராமேசுவரம் நகராட்சி அலுவலகம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ராமேசுவரம் நகர் மன்ற அதிமுக உறுப்பினர்கள் நாகசாமி, மீனாட்சிசுந்தரம், 11ஆவது வார்டு சரவணன், ஜெயலலிதா பேரவைச் செயலர் கஜேந்திரன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை நகர் இணைச் செயலர் ஸ்ரீகாந்த், அண்ணா தொழிற்சங்க மின்வாரியப் பிரிவு மாவட்டச் செயலர் முருகேசன்,திருக்கோயில் தொழிற்சங்கத் தலைவர் அண்ணாதுரை மற்றும் நகர் நிர்வாகிகள் பி.ஜி. சேகர், எஸ்.ஆர். வீரபத்திரன், வஸ்தாபி என்ற வெற்றிவேல் உள்பட அதிமுக மாவட்ட மற்றும் நகர் நிர்வாகிகள் உள்பட 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai