சுடச்சுட

  

  இலவச மின்சாரத்தை தவிர்க்க தொழில் வர்த்தக சங்கம் வேண்டுகோள்

  By dn  |   Published on : 08th October 2014 06:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இலவச மின்சாரம் வழங்குவதை தவிர்த்தால் கட்டணம் செலுத்தி மின்சாரம் உபயோகிப்போருக்கு கூடுதல் சுமை ஏற்படாது என ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தேசித்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்கம் சார்பில் எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம். உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டண விபரங்கள் நடுத்தர மக்களையும், சிறு வியாபாரிகளையும் வெகுவாக பாதிக்கும். பாதிப்புகளை விளக்கி தமிழ்நாடு மின் ஒழுங்கு முறை ஆணையத்திற்கு கடிதமும் அனுப்பியிருக்கிறோம். மின் இழப்பு 20 சதவிகிதம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனை குறைக்க நவீன உத்திகளைக் கையாள வேண்டும். மின்கட்டண பாக்கிகளை தயவு தாட்சண்யமின்றி முழுமையாக வசூலிக்க எடுக்க வேண்டும்.

  தனியாரிடமிருந்து பெறப்படும் மின்சாரத்திற்கு உற்பத்தி விலை மற்றும் நியாயமான லாபத்தை கணக்கிட்டு விலை நிர்ணயித்து பெற வேண்டும். இதன் மூலம் கூடுதல் செலவினத்தை குறைக்கலாம். எந்த பிரிவினருக்கும் இலவசமாக மின்சாரத்தை வழங்கக் கூடாது. அவ்வாறு செய்தால் கட்டணம் செலுத்தும் மின் உபயோகிப்பாளர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படாது. இரு மாதங்களுக்கான குறைந்தபட்ச கட்டணத்திலும் உயர்வு தேவையற்ற ஒன்றாகும். பழைய கட்டணமே நீடிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai