சுடச்சுட

  

  கமுதியில் செவ்வாய்க்கிழமை பகலில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய் தது.

  சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து, பூமி குளிர்ந்தது. கடந்த 5 நாள்களுக்கு முன்பு பெய்த மழைக்குப் பின்பு தற்போது மீண்டும் மழை பெய்திருப்பதால் கமுதி பகுதியில் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  வயல்களில் உழுதல், வரப்பு சீரமைப்பு, விதைப்பு, நெல் நாற்று பாவதல் உள்ளிட்ட வேலைகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் விவசாய தொழிலாளர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. உழவுக்கும் விவசாய வேலைகளுக்கும் கூடுதல் பணம் செலவழிக்க வேண்டி உள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

  அடுத்தடுத்து மழை பெய்தால்தான் செலவழிக்கும் பணமாவது திரும்பக்கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai