சுடச்சுட

  

  கமுதி பகுதி கோயில்களில் புரட்டாசி மாத பிரதோஷ உற்சவ சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

  ராமநாதபுரம் சேதுபதி மன்னர் சமஸ்தானத்திற்குப் பாத்தியமான ஸ்ரீமீனாட்சி சமேத சுந்தரேசுவரர் கோயிலில் ஸ்ரீநந்தீஸ்வரருக்கு அபிஷேகங்கள், சிறப்பு அலங்கார தீப ஆராதனைகள் நடந்தன. கோயில் உள் வளாகத்தில், நந்திவாகனத்தில் சுவாமி-அம்பாள் பவனி நடைபெற்றது.

  கமுதி அருகே கணக்கி தென்னந்தோப்பு புற்று அம்மன் கோயிலில் உற்சவ சிறப்பு பூஜைகளை சாமியார் நீ.ராமச்சந்திரன் நடத்தினார்.

  பேரையூர் சத்திரிய நாடார் உறவின்முறைக்குப் பாத்தியமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோயில், அபிராமம் செங்குந்தர் முதலியார் உறவின்முறைக்குப் பாத்தியமான ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத சிவ சுப்பிரமணியர் கோயில், நீராவி தேவாங்கர் செட்டியார் உறவின்முறைக்குப் பாத்தியமான ஸ்ரீராமலிங்க செüடாம்பிகை அம்மன் கோயில் ஆகியவற்றிலும் பிரதோஷ உற்சவம் நடைபெற்றது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai