சுடச்சுட

  

  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மாங்குடி கிராமத்தில் செங்கல் சூளையில் திங்கள்கிழமை நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

  திருப்பத்தூர் ஒன்றியம் காரையூர் ஊராட்சிக்குள்பட்ட மாங்குடி கிராமத்தில் சென்னையைச் சேர்ந்த சிவராமன் மகன் மணிகண்டன்(41) என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது, இச்சூளையில் திங்கள்கிழமை நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு அளித்த தகவலின்படி நிலைய அலுவலர் பாண்டியராஜன் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து பரவாமல் தீயை அணைத்தனர். அதற்குள் ரூ.5 லட்சம் மதிப்பிலான கொட்டகை மற்றும் செங்கல்கள் சேதமடைந்தன. இச்சம்பவம் குறித்து சூளையின் மேலாளர் செந்தில்குமார் கண்டவராயன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai