சுடச்சுட

  

  விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் போதுமான அளவு கையிருப்பு வைக்கப்பட்டிருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் நா.வீ.கிருஷ்ணமூர்த்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

  செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயப் பணிகள் பெரும்பாலும் வடகிழக்கு பருவ மழையை நம்பியே நடந்து வருகிறது. செப்டம்பர் மாதத்தில் கிடைக்கப் பெற்ற மழையினை பயன்படுத்தி முன் பருவ விதைப்பாக 75 ஆயிரம் ஹெக்டேரில் நெல் மானாவாரியாக விதைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாள்களாக மாவட்டம் முழுவதும் பெய்த மழை முன்பருவ விதைப்புப் பயிர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. பயிர்களுக்கு அடியுரங்களான டி.ஏ.பி.மற்றும் என்.பி.கே. கலப்பு உரங்கள், தேவைப்படும்.

  ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் மற்றும் கலப்பு உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

  மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் யூரியா 798மெ.டன், டி.ஏ.பி.982மெ.டன், பொட்டாஷ் 27மெ.டன் மற்றும் என்.பி.கே.கலப்பு உரங்கள் 606 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதே போன்று தனியார் உரக்கடைகளில் யூரியா 1771 மெ.டன், டி.ஏ.பி.207மெ.டன், பொட்டாஷ் 99 மெ.டன் மற்றும் என்.பி.கே.கலப்பு உரங்கள் 501 மெ.டன்களும் இருப்பு உள்ளன.

  உர நிறுவனங்களிடமிருந்து தேவைக்கேற்ப உரங்களை பெறுவதற்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் வேளாண்மைத்துறையின் பரிந்துரையின்படியோ, மண் ஆய்வுகளின் அடிப்படையில் பயிர்களுக்கு தேவையான அடியுரங்களை மட்டும் இடுமாறு அவரது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai