சுடச்சுட

    

    ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் கவிதைக்குடி கிராமத்தில் நடைபெற்றது.

    கவிதைக்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்ற துவக்க விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் டி.பால்மாறன் தலைமையும், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெ.மகேந்திரன் ஜேம்ஸ் முன்னிலையும் வகித்தனர். கவிதைகுடி ஊராட்சி மன்ற தலைவர் கணபதி அனைவரையும் வரவேற்று பேசினார். முகாம் நாள்களின் போது குளக்கரை ஓரங்கள், நூல்நிலைய வளாகம், நியாய விலைக்கடை, சாலைகள் சுத்தம் செய்யப்பட்டன. மழைநீர் சேகரிப்பின் அவசியம், எய்ட்ஸ் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாலிதீன் ஒழிப்பு பற்றிய குறுநாடகங்களும் நடத்தப்பட்டன. நிறைவு விழாவுக்கு நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் ஏ.செய்யது ஒலி தலைமை வகித்தார். சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் டி.பால்மாறன் பங்கேற்று மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட உதவித் திட்ட அலுவலர் தமிழரசு நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai