Enable Javscript for better performance
நாட்டு நலப்பணித் திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

    By dn  |   Published on : 08th October 2014 06:19 AM  |   அ+அ அ-   |    |  

    பரமக்குடி சுந்தர்ராஜப்பட்டணத்தில் கே.ஜே.கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் 7 நாள் சிறப்பு முகாமின் நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    பள்ளியின் தாளாளர் இ.முகம்மதுஉமர் தலைமை வகித்தார். கீழ முஸ்லிம் ஜமாத் சபைத் தலைவர் எஸ்.என்.எம்.முகம்மதுயாகூப், செயலர் எஸ்.என்.ஏ.முஹம்மதுஈசா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளித் தலைமையாசிரியர் எம்.அஜ்மல்கான் வரவேற்றார். நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 7 நாள் சிறப்பு முகாமில் சுந்தர்ராஜப்பட்டிணம் தெருக்களை சுத்தம் செய்தல், கோயில்களில் உழவாரப்பணி, மரக்கன்றுகள் நடுதல், எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி, இலவச கண்சிகிச்சை முகாம், பரமக்குடி பேருந்து நிலையம் மற்றும் ரயில்நிலையங்களில் தூய்மைப்படுத்தும் பணியினை மேற்கொண்டனர் (படம்).

    நிறைவு விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

    பரமக்குடி மாவட்டக் கல்வி அலுவலர் வி.பழனியாண்டி வாழ்த்துரை வழங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜஹாங்கீர்உசேன் நன்றி கூறினார்.

     

    kattana sevai