சுடச்சுட

  

  கமுதி புதிய உதவி காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட சுந்தரவடிவேல் பொறுப்பேற்றுக்கொண்டார்.

  ராமநாதபுரம் மாவட்டம், கமுதி இணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த வி.விக்ரமன், பதவி உயர்வு பெற்று, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  இதையடுத்து கமுதி உதவி காவல் கண்காணிப்பாளராக எஸ்.சுந்தவடிவேல் நியமனம் செய்யப்பட்டு, பதவிப்பொறுப்பு ஏற்றுள்ளார்.

  இவர் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார்.

  பொறுப்பேற்ற பின் கமுதி, அபிராமம், மண்டலமாணிக்கம், கோவிலாங்குளம், பெருநாழி ஆகிய காவல் நிலையங்களுக்கு சென்று பார்வையிட்டார். சட்டம், ஒழுங்கு, அமைதி காக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று காவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

  நேரில் சந்திக்க முடியாதவர்கள் செல்-94435 62856, போன்-223231 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று சுந்தரவடிவேல் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai