சுடச்சுட

  

  கமுதி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்துக்கு தலைவர், வழக்குரைஞர் த.பாலு தலைமையும், துணைத்தலைவர்செ.மணி முத்து, ஆணையர் வீரராகவன்(கி.ஊ) ஆகியோர் முன்னிலையும் வகித்தனர். கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்கள், துணை ஆணையர்கள் எஸ்.ராஜேந்திரன்(நிர்வாகம்), வி. தங்கப்பாண்டியன்(திட்டம்), அ.மங்களேஸ்வரி(மகாத்மா காந்திஜி வேலை வாய்ப்பு அளிப்பு), ஏ.பி.பச்சமால்(சத்துணவு) மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் 13 தீர்மானங்கள் கவுன்சிலர்கள் ஒப்புதலுடன் நிறைவேறின. பேரையூர் அரசு தலைமை ஆரம்பச் சுகாதார நிலையத்துக்குள்பட்ட கிராமங்களில் டெங்கு, சிக்குன் குனியா காய்ச்சல் ஒழிப்பு திட்டத்தில் கொசுப் புழுக்களை ஒழிக்க 20 தாற்காலிக மஸ்தூர் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் ரூ.1,43,360-க்கு கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai