சுடச்சுட

    

    ஜெயலலிதா விடுதலை பெறக் கோரி தேவர் நினைவிடத்தில் வேள்வி பூஜை

    By கமுதி,  |   Published on : 09th October 2014 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா விடுதலை பெறக்கோரி, திங்கள்கிழமை பசும்பொன் தேவர் நினைவிட மண்டப வளாகத்தில், சிறப்பு யாகசாலை வேள்வி பூஜை நடைபெற்றது.

    ஆப்பநாடு மறவர்கள் சங்க இளைஞர் அமைப்பினர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஏ.அன்வர்ராஜா எம்.பி. முன்னிலை வகித்தார்.

    மு.முருகன் எம்.எல்.ஏ, மாவட்டச் செயலர் ஆர்.தர்மர், முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், கமுதி ஒன்றிய அவைத் தலைவர் க.சிங்கம் என்ற முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் மாவட்ட செயலர் கே.சி.ஆணிமுத்து, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் வழக்குரைஞர் த.பாலு (கமுதி), வி.மூக்கையா (கடலாடி), கமுதி ஒன்றியச் செயலர் ஏ.மீனாட்சி சுந்தரம், மாவட்ட மருத்துவர் அணி துணைச் செயலர் எம்.கபிலன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் கரிசல் புளி முனியசாமி, வழக்குரைஞர் எஸ்.முத்துராமலிங்கம் மற்றும் ஆப்ப நாடு மறவர்கள் சங்க இளைஞர் அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai