சுடச்சுட

    

    துவக்கப் பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமிக்க கோரிக்கை

    By திருவாடானை  |   Published on : 09th October 2014 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடனை தினைகாத்தன்வயல் துவக்கப் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவாடானை தாலுகா தினைகாத்தன்வயல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் துவக்க பள்ளி உள்ளது. இந்தப்பள்ளியில் கடந்த ஆண்டு ஒரு தலைமை ஆசிரியர், ஒரு உதவி ஆசிரியர் பணிபுரிந்து வந்த நிலையில், உதவி ஆசிரியர் மாறுதலில் சென்று விட்டார். அவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட ஆசிரியரும், இந்தப் பள்ளியில் பணியில் சேராமல் வேறு மாவட்டத்துக்கு பணிமாறுதலில் சென்று விட்டார்.

    தற்போது தலைமை ஆசிரியர் மட்டுமே பணிபுரிகிறார். இதனால் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் கல்வி பாதிப்படைவதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து பள்ளி மேலாண்மைத் குழு தலைவி ராணி கூறுகையில், துவக்கப் பள்ளியில் ஓரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai