சுடச்சுட

    

    பழிக்குப்பழி கொலைத் திட்டம் தீட்டிய 4 பேர் கைது: ஆயுதங்கள் பறிமுதல்

    By ராமேசுவரம்  |   Published on : 09th October 2014 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தங்கச்சிமடம் பகுதியில் கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்தவரை பழிக்குப்பழியாக கொலை செய்ய திட்டமிட்ட நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.

    ராமநாதபுரத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில், சிலம்பரசன் என்பவரை சக்திவேல் கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட சக்திவேல் சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் ஜாமீனில் வந்த சக்திவேல் தங்கச்சிமடம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சிலம்பரசனின் நண்பர்கள் அவரது கொலைக்கு பழிவாங்க, சக்திவேலை கொலை செய்வதற்காக திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி தங்கச்சி மடம் பேருந்துநிலையம் அருகே நான்கு பேரும் ஆயுதங்களுடன் நின்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தங்கச்சி மடம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, அங்கு நின்றிருந்த பிரபு, சந்துரு, அஸ்ரப்அலி, பார்த்திபன் ஆகிய நால்வரையும் கைது செய்து அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai