சுடச்சுட

  

  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடந்த வன உயிரின வார விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வன உயிரின வார விழாவுக்கு வன உயிரின காப்பாளர் தீபக் பில்கி தலைமை வகித்து பேச்சு, ஓவியம்,வினாடி வினாப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசியது:

  வன உயிரின வாரவிழா ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. வன உயிரினம் என்பது மிருகங்கள் மட்டுமில்லாமல் மரங்கள், செடிகள், கொடிகள், நீர்வாழ் உயிரினங்கள் உள்ளிட்ட அனைத்தையும் குறிப்பதாகும்.

  ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்காகவே மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய காப்பகம் அமைக்கப்

  பட்டிருக்கிறது. வன வளங்களைப் பாதுகாப்பது நமது ஒவ்வொருவரின் கடமையாகும் என்றும் பேசினார். விழாவிற்கு மாவட்ட வன அலுவலர் எம்.பிச்சை, மாவட்டக் கல்வி அலுவலர் வெ.சாந்தி, வனச்சரகர் எஸ்.கணேசலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கா.குமார் வரவேற்று பேசினார்.

  விழாவில் வனச்சரகர்கள், வனப்பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், சுற்றுச்சூழல் அலுவலர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர். வன உயிரினப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு குறும்படமும் திரையிட்டுக் காட்டப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai