சுடச்சுட

  

  ராமநாதபுரம் மாவட்டத்தில் இலவச கண் மருத்துவ முகாம்

  By கமுதி,  |   Published on : 09th October 2014 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 ஊர்களில் அக்.10 முதல் இலவச கண் மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.

  மாவட்ட ஆட்சியர், க.நந்த குமார் உத்தரவில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட அலுவலர், மருத்துவர் எஸ்.சுபாசங்கரி மேற்பார்வையில் இந்த முகாம்கள் நடைபெறுகின்றன.

  முகாம்களில் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை, பரமக்குடி, தாலுகா தலைமை அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் கண் மருத்துவமனைகள் ஆகியவற்றைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் வட்டார கண் மருத்துவ உதவியாளரக்ள் பங்கேற்கின்றனர். முகாம்களில் கண் பரிசோதனை செய்து கொண்டவர்களில் தேவைப்படுவோர், இலவச கண் அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். முகாம்கள் நடைபெறும் தேதி, ஊர், இடம், பங்கேற்கும் மருத்துவமனை விவரம்:

  அக்.10-சம்பை, ஊ.ஒ.பள்ளி, ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை, 12-எமனேஸ்வரம், அரசு மேனிலைப்ள்ளி, தலைமை மருத்துவமனை, 13-சித்தார் கோட்டை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 14 (2 ஊர்கள்):வேதாளை, ஊராட்சி மன்றம் அலுவலகம், அரியான் கோட்டை-அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,

  16-கமுதி, தாலுகா தலைமை அரசு மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனை, 17 திருப்புல்லாணி, ஊ.ஒ.பள்ளி, தலைமை மருத்துவமனை, 18டி.மாரியூர், ஊ.ஒ.பள்ளி, தலைமை மருத்துவமனை, 24 ஆர்.எஸ்.மங்கலம், அ.ஆ.சுகாதார நிலையம், தலைமை மருத்துவமனை,

  25-சத்திரக்குடி, அ.ஆ.சு. நிலையம், தலைமை மருத்துமவனை, 31-தொண்டி, அ.ஆ.சு.நிலையம், தலைமை மருத்துவமனை. முகாம்களில் அந்தந்த பகுதி ஊர்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு இலவச கண் மருத்துவ பயன் பெறும்படி ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். முகாம்கள் ஏற்பாடுகளை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு

  சங்க திட்ட ஒருங்கிணைப்பாளர் கே.பாலசுப்பிரமணியன், மாவட்ட முகாம்கள் அமைப்பாளர், ஆசிரியர் எஸ்.ஐயப்பன், வட்டார கண் மருத்துவ உதவியாளர்கள், மருத்துவமனை முகாம் அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கவனித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai