சுடச்சுட

    

    இந்தியன் ரெட்கிராஸ் சார்பில் புரவலர்களுக்கு சான்று வழங்கல்

    By ராமநாதபுரம்  |   Published on : 10th October 2014 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் ராமநாதபுரம் அருகேயுள்ள பெருங்குளம் மருத்துவமனை வளாகத்தில் புரவலர்களுக்கு சான்று வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

    விழாவுக்கு இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் கிளையின் துணைத் தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் தலைமை வகித்தார். மற்றொரு துணைத் தலைவர் ஹாரூன் முன்னிலை வகித்தார்.

    ராமநாதபுரம் கிளைத் தலைவர் சண்முகராஜேஸ்வரன் வரவேற்றார்.

    இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் முனைவர் ஹரீஷ். எல். மேத்தா, மாநில துணைத் தலைவர் டி.ஏ. பிரபாகர் ஆகியோர் புரவலராக இணைந்தவர்களுக்கு அதற்கான சான்றுகளை வழங்கிப் பேசினார்கள்.

    விழாவில் சித்தார்கோட்டை முகம்மதியா பள்ளிகளின் தாளாளர் எஸ். தஸ்தகீர், மருத்துவர்கள் டி. அரவிந்தராஜ், சின்னத்துரை அப்துல்லா, கியாதுதீன்,டி.எஸ். சேதுராமன், முகம்மது காசிம், ஹர்ஷவர்த்தன், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஜெ. ரமேஷ்பாபு, டி. அன்பழகன் ஆகியோருக்கு புரவலர்க்கான சான்றுகள் வழங்கப்பட்டன.

    திருநெல்வேலி மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் செயலாளர் ஆசிரியர் சொக்கலிங்கத்துக்கு அரசு மருத்துவர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்து நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை துணைச் செயலாளர்கள் ஜீவா, குணசேகரன், எம். பாலமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai