சுடச்சுட

  

  உளவுப்பிரிவு இளநிலை அறிக்கையாளர் பணிக்கு பரிந்துரை

  By ராமநாதபுரம்  |   Published on : 10th October 2014 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காவல்துறை உளவுப்பிரிவில் இளநிலை உதவியாளர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை செய்யப்பட இருப்பதாக ஆட்சியர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இப்பணிக்கு கல்வித்தகுதியாக 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்து, தட்டச்சில் முதுநிலை தேர்ச்சி பெற்று, பதிவு செய்தவராக இருக்க வேண்டும். கடந்த 1.7.2014 அன்று தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு வயது 18 முதல் 35 வரையும்,பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு 18 முதல் 32 வரையும், பொதுப்போட்டியாளருக்கு வயது 18 முதல் 30 வரையும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு இல்லை.

  உத்தேச பதிவு மூப்பு அடிப்படையில் பொதுப்போட்டியாளர்களில் முன்னுரிமையுள்ள மற்றும் முன்னுரிமையற்ற அனைவரும் (பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவிர) பரிந்துரைக்கப்படவுள்ளனர்.

  இத்தகுதிகளையுடைய பதிவுதாரர்கள் இளநிலை அறிக்கையாளர் பணிக்கு பரிந்துரைக்கப்பட இருப்பதால் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்து சான்றிதழ்களுடன் இம்மாதம் 13 ஆம் தேதி வருகை புரிந்து பரிந்துரை விவரத்தினை அறிந்து கொள்ளுமாறும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai