சுடச்சுட

  

  கமுதி பேரூராட்சியில் செயல்படுத்தப்படும் குப்பை மேலாண்மைத் திட்டத்தை பேரூராட்சிகள் உதவி இயக்குநர், புதன்கிழமை நேரில் பார்வையிட்டு பாராட்டினார்.

  கமுதி பேரூராட்சித் தலைவர் எஸ்.கே.சி.ரமேஷ்பாபு ஆலோசனையில் செயல் அலுவலர் ஏ.தனபால் மற்றும் சுகாதார கண்காணிப்பாளர்கள், தினசரி தெருக்களிலும், சாலைகளிலும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரிக்கச் செய்கின்றனர்.

  பின்னர் இவை பேரூராட்சி உரக்கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு, பெரிய குழிகளில் மக்கும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, இயற்கை உரமாக மாற்றப்படுகிரது. இதே போல பிளாஸ்டிக் பைகள் போன்ற மக்காத தன்மையுடைய குப்பைகள் எந்திரத்தில் அரைக்கப்பட்டு, தார்க்கலவையுடன் கலக்கப்பட்டு சாலைகள் அமைக்க பயன்படுத்தப்படுகின்றன.

  இந்தப் பணிகளை, சிவகங்கை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மரிய எல்ஸி நேரில் சென்று பார்வையிட்டு பாராட்டினார். உடன் செயல் அலுவலர் ஏ.தனபால், பணியாளர்கள் அழகர்சாமி, அழகேசன் உள்ளிட்டோர் இருந்தனர். பின்னர் சிங்கப்புளியாபட்டியில் மாவட்ட ஆட்சியரின் நிதி.ரூ.1 லட்சம் மூலம் கட்டப்பட்டுள்ள சத்துணவு மையக் கட்டடத்தையும் உதவி இயக்குநர் பார்வையிட்டார்.

  மேலும் அபிராமம் பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai