சுடச்சுட

    

    முதுகுளத்தூர் நகர தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    நிர்வாகிகள் தேர்வுக்கூட்டத்துக்கு மாநில பேச்சாளர் கோவை ஜெயினுலாபுதீன் தர்பியா தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்புக்குழு நிர்வாகிகள் பாகிர் அலி, செய்யது, வாவா ராவுத்தர், சல்மான் ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதிய நிர்வாகிகள் தேர்வில், நகரத் தலைவராக ஜபருல்லாகான், துணைத்தலைவர் முகம்மது இக்பால், செயலர் முகம்மது ஜியாவுதீன், பொருளாளர் சிக்கந்தர், மமக நகர செயலர் அஷ்ரப் அலி, துணைச்செயலர் ஜாகிர் உசேன், தொண்டரணி செயலர் செய்யது மீரா, தொழிலாளர் அணி முகம்மது அலி, மருத்துவ சேவை அணிச்செயலர் முஷாபர் கனி,மாணவரணி செயலர் யாசர் அராபத், தமுமுக நகர துணைச்செயலர் முகம்மது சிக்கந்தர் ராஜா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில் முகம்மது இக்பால் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai