சுடச்சுட

  

  ராமநாதபுரம் அருகேயுள்ள தியாகவன்சேரி கிராமத்தில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் முளைக்கொட்டுத் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

  அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் 15 ஆம் ஆண்டு முளைக்கொட்டுத் திருவிழா கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காப்புக்கட்டு உற்சவத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினசரி ஒயிலாட்டம், கும்மியடித்தல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக இம்மாதம் 7 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முளைப்பாரி ஊர்வலம் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து மீண்டும் கோயிலுக்கு வந்து நிறைவு பெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாரதனைகளும் நடந்தன.

  புதன்கிழமை கிராமத்துப் பெண்கள் பலரும் புத்தாடை அணிந்து முளைப்பாரியை தலையில் ஏந்தி சுமார் 3 கி.மீ.தூரம் உள்ள தியாகவன்சேரி கண்மாயில் கரைத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தியாகவன்சேரி கிராமப் பொதுமக்களும், இளைஞர் அணியினரும் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai