சுடச்சுட

    

    திருவாடானை பகுதியில் தொடர் மின்தடை: பொதுமக்கள் அவதி

    By திருவாடானை,  |   Published on : 10th October 2014 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவெற்றியூர் பகுதிகளில் கடந்த 5 நாள்களாக ஏற்பட்டுள்ள தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

    திருவாடானை தாலுகா திருவெற்றியூர் பகுதிகளான ஆதியூர், அரும்பூர், கட்டுக்குடி,புல்லுகுடி, வளத்தூர், முகிழத்தகம், தினையத்தூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், கடந்த 5 நாள்களாக ஏற்பட்டுள்ள தொடர் மின் தடையால் இப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கின.

    தொண்டி, திருவாடானை, சி.கே.மங்கலம், திருவெற்றியூர் பகுதிகளில் உள்ள மின்பகிர்மான இயந்திரங்கள் சரிவர பராமரிக்கப்படாததால் பழுது ஏற்பட்டு அடிக்கடி மின் தடை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

    மேலும் கிராமங்களில் இரவு நேரங்களில் மின் தடை ஏற்பட்டால் மறுநாள்தான் பழுது பார்க்கப்பட்டு மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மின் விநியோகத்தை சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai