சுடச்சுட

  

  தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்க, 14 வயதுக்கு உட்பட்ட தமிழக மாணவர்களுக்கு 10 நாள் பயிற்சி முகாம் நிறைவு பெற்றது.

  அகில இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் நடத்தும், தேசிய அளவிலான 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்குரிய கைப்பந்து விளையாட்டுப் போட்டி, ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு சார்பில் 12 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

  தேர்வு ஆன மாணவர்களுக்கு, ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அபிராமம் முஸ்லீம் மேனிலைப் பள்ளி மைதானத்தில், 10 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

  இவர்களுக்கு பரமக்குடி ராஜா சேதுபதி அரசு மேனிலைப்பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் ராஜா, விளையாட்டு அணி மேலாளர் சூரன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பயி ற்சி அளித்தனர்.

  பயிற்சி சமயம் மாவட்ட முன்மை கல்வி அலுவலர் கே.ஜெயக்கண்ணு, மாவட்ட உடற்கல்வி அலுவலர் (கூடுதல் பொறுப்பு) சு.பிரசாத் ஆகியோர் முகாமிட்டு, பார்வையிட்டனர். மாணவர்களுக்கு இவர்கள் விளையாட்டுப் போட்டிக்குரிய சீருடைகள் மற்றும் கேன்வாஸ்கள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கினர்.

  முகாம் ஏற்பாடுகளை உயற்பயிற்சி பாட இயக்குநர்கள் அன்சாரி (அபிராமம் முஸ்லீம் மேனிலைப்பள்ளி), கேசவன் பாபு (பரமக்குடி செüராஷ்டிரா மேனிலைப்பள்ளி), சித்தார்கோட்டை அரசு மேனிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அஜீஸ் உள்ளிட்டோர் கவனித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai