சுடச்சுட

  

  தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் தமிழ்துறை சார்பாக பதிப்பு செம்மல் ச.மெய்யப்பனார் அறக்கட்டளை சொற்பொழிவு நடைபெற்றது.

  சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சந்திரமோகன் தலைமை வகித்தார். தமிழ்த்துறை பேராசிரியர் கண்ணதாசன் வரவேற்றார். புதுக்கோட்டை ஞானாலயத்தை சேர்ந்த பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி அறிமுக உரையாற்றினார். மலேசிய படைப்பாளி ந.அ.செங்குட்டுவன் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். அவர் பேசுகையில், இலக்கியங்களே உயிர்மூச்சு எனவும், இலக்கியங்களே மனதை பண்படுத்தி, ஆன்மாவுக்கு இன்பத்தை அளிக்க கூடியது என்றார். மேலும் மலேசிய மக்களின் வாழ்வியலுக்கும் தமிழக மக்களின் வாழ்வியலுக்கும் உள்ள ஓற்றுமை வேற்றுமைகளை நினைவு கூர்ந்தார். தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் மாரிமுத்து நன்றி கூறினார். மேலும் நிகழ்ச்சியில் முனைவர் ரெத்தினேஸ்வரர், முன்னாள் தமிழ்த்துறை பேராசிரியர் பழனி ராகுலதாசன், முனைவர் ஊடிவயலார் ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai