சுடச்சுட

    

    நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு பாராட்டு

    By ராமேசுவரம்,  |   Published on : 10th October 2014 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

    ராமேசுவரம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் செப்.30-இல், ராமேசுவரம் எஸ்.கே.பட்டி கிராமத்தில் தொடங்கியது.

    இதைத் தொடர்ந்து சாலைகளில் இடையூறாக உள்ள கருவேல மரங்களை அகற்றியும், கிராமப் பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர்.

    மேலும் புனித தீர்த்தக் குளங்களிலும் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

    இதனையொட்டி முகாமில் கலந்து கொண்டு சேவையாற்றிய மாணவர்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை எஸ்.கே.பட்டி கிராம சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் மோகன்ராஜ் தலைமை வகித்தார்.

    உதவித் தலைமை ஆசிரியர் மதியழகன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் ராமேசுவரம் சுற்றுலா வளர்ச்சிக் கழக தங்கும் விடுதி மேலாளர் குணேஸ்வரன், கம்பன் கழகத் தலைவர் முரளீதரன், பொருளாளர் ராமச்சந்திரன், சமூகஆர்வலர் தில்லைபாக்கியம், விவேகானந்தா கேந்திரப் பொறுப்பாளர் சரஸ்வதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை ராமேசுவரம் ரோட்டரி சங்கத் தலைவர் பொறியாளர் முருகன் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலர் நல்லாசிரியர் ஜெயகாந்தன் செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai