சுடச்சுட

    

    பட்டு வளர்ச்சித் துறை ஆய்வாளர் பணிக்கு பரிந்துரை

    By ராமநாதபுரம்,  |   Published on : 10th October 2014 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பட்டுவளர்ச்சித்துறை ஆய்வாளர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை செய்யப்பட இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இப்பதவிக்கு கல்வித்தகுதியாக பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சியுடன் பட்டு வளர்ச்சியில் ஆறுமாத முன் அனுபவச்சான்று பதிவு செய்தவராக இருக்க வேண்டும். அல்லது ஓசூரில் உள்ள பட்டு வளர்ச்சித் துறையில் ஆறுமாத பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். வயது வரம்பைப் பொறுத்தவரை கடந்த 1.7.2014 அன்று தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினராக இருந்தால் 18 முதல் 33 வரையும், பிற்பட்ட, மிகவும் பிற்பட்டவராக இருந்தால் 18 முதல் 28 வரையும், பொதுப்போட்டியாளருக்கு 18 முதல் 28 வரையும் வயது இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வும் இல்லை.

    உத்தேச பதிவு மூப்பு அடிப்படையில் பொதுப்போட்டியாளர்களில் முன்னுரிமையுள்ள மற்றும் முன்னுரிமையற்றவர்கள் அனைவரும் பரிந்துரைக்கப்படவுள்ளனர்.

    இத்தகுதிகளையுடைய பதிவுதாரர்கள் இளநிலை பட்டு வளர்ச்சி ஆய்வாளர் பணிக்கு பரிந்துரை செய்யப்பட இருப்பதால் இம்மாதம் 13 ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் அனைத்து சான்றிதழ்களோடும் வந்து பரிந்துரை விவரத்தினை தெரிந்து கொள்ளுமாறும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai