சுடச்சுட

    

    கமுதியில் புதிய திரைப்பட திருட்டு சி.டி.கள் விற்றவரை, போலீஸார் கைது செய்தனர்.

    கமுதியில் புதிய திரைப்பட திருட்டு சி.டி.கள் விற்கப்படுவதாக, உதவி காவல் கண் காணிப்பாளர் எஸ்.சுந்தரவடிவேலுவுக்கு தகவல் கிடைத்தது.

    இதைடுத்து சி.டி. விற்பனை கடைகளில் பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் சங்கு தலைமையில் புதன்கிழமை போலீஸாருடன் சென்று திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது அப்துல் (37) என்பவரது கடையில் ஜீவா, சிகரம் தொடு, யான் உள்ளிட்ட புதிய திரைப்பட திருட்டு சி.டி.கள் விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

    இதையடுத்து சி.டி.களைக் கைப்பற்றி, அப்துலை போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai