சுடச்சுட

    

    கமுதி அருகே குடும்பத் தகராறில் பெண்ணை தாக்கியதாக தாய், மகன், மகள் ஆகியோரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

    மண்டலமாணிக்கம் அருகே சின்ன உடப்பங்குளத்தைச் சேர்ந்தவர் சங்கிலி. இவரது மனைவி முத்துமாரி(45).

    இவருக்கும் வீரவள்ளி(32) என்ற பெண்ணுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில் வீரவள்ளியின் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து, முத்துமாரி, இவரது மகன் வீரமணி(27), மகள் மல்லிகா(23) ஆகியோர் தாக்கி காயப்படுத்தினார்களாம். புகாரின்பேரில் மண்டலமாணிக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai