சுடச்சுட

  

  மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரதம்

  By ராமநாதபுரம்  |   Published on : 10th October 2014 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் சார்பில் ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

  அரசுப்போக்குவரத்துக்கழக பணிமனை முன்பாக நடந்த உண்ணாவிரதத்துக்கு மாவட்ட அமைப்பாளர் ரா.லிங்கம் தலைமை வகித்தார். அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர் பேராசிரியர் மோகன்தாஸ், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் மாநில செயலர் ஆ.ஆடலரசன், ராமசேது பாதுகாப்பு இயக்க செயலர் து.குப்புராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாஜக தேதிய செயற்குழு உறுப்பினர் கே.முரளீதரன், மாவட்ட தலைவர் சண்முகராஜ், இந்து முன்னணி மாநில பேச்சாளர் ரெத்தினசபாபதி, மாவட்ட செயலர் ராமமூர்த்தி, சேவாபாரதி அமைப்பின் மாநில அமைப்பாளர் முனியசாமி, ஏகல் வித்யாலயா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன், ஆர்.எஸ்.எஸ். மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம், பாஜக இளைஞரணி மாவட்ட செயலளர் ஆத்ம.கார்த்திக், மாநில மீனவரணித் தலைவர் காந்தி ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டு பூரண மதுவிலக்கின் அவசியம் குறித்து விரிவாக பேசினார்கள்.

  உண்ணாவிரதத்தில் சேவாபாரத், ஆர்.எஸ்.எஸ்., பாரதீய மஸ்தூர் யூனியன், விசுவ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்பின் நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai