சுடச்சுட

  

  வைகை ஆற்றில் தண்ணீர் திறக்க ஓய்வூதியர்கள் கோரிக்கை

  By பரமக்குடி,  |   Published on : 10th October 2014 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமக்குடி வைகை ஆற்றுப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாததால் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என ஓய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  பரமக்குடி ஓய்வூதியர் சங்க அலுவலகத்தில் அச்சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு துணைத் தலைவர் வி.கார்மேகம் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் எஸ்.முருகேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு இறங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஓய்வூதியப்பலன்கள் 31.12.1995 முடிய வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்களுக்கு 1.1.1996 முதல் 1.1.2006 வரைக்கும் விடுபட்ட ஓய்வூதியப் பலன்கள் கிடைக்க திருத்திய அரசாணை வெளியிட வேண்டும், மத்திய அரசு வழங்குவது போல் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 3,500 ஐ தமிழக அரசும் வழங்க வேண்டும், மத்திய அரசுக்கு இணையாக மருத்துவப்படி, ஓய்வூதியர்கள் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 50 சதவீதம் பயண கட்டண சலுகை வழங்க வேண்டும்,

  ராமநாதபுரம் மாவட்டம் தண்ணீரின்றி மிகவும் வறட்சியாக காணப்படுகிறது. வைகை ஆற்றில் கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீர் திறந்து விடப்படாததால் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து விட்டது. குடிநீர் பற்றாக்குறையை போக்க போர்க்கால அடிப்படையில் வைகை ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai