Enable Javscript for better performance
ஹோட்டல் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    ஹோட்டல் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை

    By பரமக்குடி  |   Published on : 10th October 2014 12:36 AM  |   அ+அ அ-   |    |  

    தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் பரமக்குடியில் ஹோட்டல் உரிமையாளர் வியாழக்கிழமை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    பரமக்குடி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகன் தமிழ்மணி (28) இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஹோட்டல் தொழில் செய்து வந்துள்ளார்.

    தொடர்ந்து தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வந்த நிலையில் குடும்பத்திலும் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

    இதில் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது உடல் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனைக்குப் பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதுகுறித்து பரமக்குடி நகர் காவல்நிலையத்தில் அவரது சகோதரர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    kattana sevai