சுடச்சுட

  

  அக்.14 இல் அஞ்சல் துறையின் வாடிக்கையாளர் சந்திப்பு

  By ராமநாதபுரம்  |   Published on : 11th October 2014 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்திய அஞ்சல் துறை அஞ்சல் வாரம் கொண்டாடப்பட்டு வருவதை முன்னிட்டு இம்மாதம் 14 ஆம் தேதி ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு வாடிக்கையாளர் சந்திப்பை நடத்த முடிவு செய்துள்ளது.

  இது குறித்து ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் என்.ஜெ.உதயசிங் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்திய அஞ்சல் துறை இம்மாதம் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை அஞ்சல் வாரமாக கொண்டாடவுள்ளது.

  இதன் காரணமாக இம்மாதம் 14 ஆம் தேதி ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாலை 3 மணிக்கு குறை தீர்க்கும் கூட்டமும், 4 மணிக்கு வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் குறைகளை தபால் மூலமோ அல்லது நேரிலோ தெரிவிக்கலாம் என்றும் தனியார் கொரியர் மூலம் வரும் தபால்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai