சுடச்சுட

    

    அபிராமம் முஸ்லீம் பள்ளி என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு

    By கமுதி,  |   Published on : 11th October 2014 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கமுதி அருகே அபிராமம் முஸ்லீம் மேனிலைப்பள்ளி என்.எஸ்.எஸ். திட்ட மாணவர்களின் 7 நாள் சிறப்பு சேவை முகாம், வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.

    முத்தாதிபுரத்தில் நடைபெற்ற முகாமில், ஊ.ஒ.தொடக்க பள்ளி வளாகம், நத்தம் ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் துப்புரவு, அண்ணா நகர் காலனி சாலை, நத்தம் சாலை மற்றும் மயானச்சாலை ஆகியவை சீரமைப்பு உள்ளிட்ட பணிகளில் என்.எஸ்.எஸ். மாணவர்கள் ஈடுபட்டனர்.

    முகாம் நிறைவு விழாவுக்கு பள்ளித் தாளாளர் கே.ஏ.முகைதீன் மீரா தலைமை வகித்தார். நத்தம் ஊராட்சி தலைவர் டி.முனீஸ்வரி, உதவி தலைவர் எம்.முத்துமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் எஸ்.பசீóர் அகம்மது வரவேற்றார். விழாவில் ஆசிரியர்கள் கே.ஆர்.ஜாகிர் உசேன், ஏ.கே.சாகுல் ஹமீது, வி.எஸ்.இத்ரீஸ் முகம்மது, வி.ஏ.ராவுத்தர் நயினார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர்களின் சேவைப் பணிகளை பலரும் பாராட்டிப் பேசினர். முகாம் ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் வழிகாட்டுதலில் திட்ட ஒருங்கிணைப்பாளர் எச்.முகம்மது ரபி, உதவி ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.கண்ணதாசன், ஏ.பசீர், ஏ.எல்.சாகுல் ஹமீது, டி.மணிமாறன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் அன்சாரி உள்ளிட்டோர் கவனித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai