Enable Javscript for better performance
ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கணிதத்திறன் வளர் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கணிதத்திறன் வளர் பயிற்சி

    By பரமக்குடி,  |   Published on : 11th October 2014 12:44 AM  |   அ+அ அ-   |    |  

    பரமக்குடி வட்டார வளமையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான கணித திறன் மேம்படுத்தும் முகமாக அவர்களுக்கு பயிற்சியளிக்க ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு செய்முறையுடன் கூடிய பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இப்பயிற்சியினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.ஜெயக்கண்ணு தலைமை ஏற்று துவக்கி வைத்தார். உதவி திட்ட அலுவலர் சுரேஷ்குமார், வட்டார வளமைய மேற்பார்வையாளர் இ.பாண்டிமாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் த.சந்திரசேகர் வரவேற்றார்.

    அனைத்து பள்ளி மாணவ-மாணவிகளும் கணிதத்தை எளிய முறையில் கற்றுக்கொள்ளும் வகையில் கணித உபகரணப் பெட்டியைக் கொண்டு கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் கணக்குகளை சிறு விளையாட்டுகளுடன் கற்றுக்கொடுக்கும் வகையில் விளக்கமளிக்கப்பட்டது. இதற்கு பயிற்சியாளர்களாக ஆசிரியர்கள் அன்பு, மகேந்திரன், குருசாமி ஆகியோர் செயல்பட்டனர். இதில் 32 ஆசிரியர் பயிற்றுநர்கள், 8 கணித ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai