சுடச்சுட

  

  கடலாடி தாலுகாவில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட துணைச் செயலாளர் நீதி மன்னன் தலைமை வகித்தார். மாதர் சங்க மாவட்ட செயலாளர் நவராணி முன்னிலை வகித்தார். தாலுகா செயலாளர் கருணாநிதி, மாவட்ட செயலாளர் ராஜன் ஆகியோர் பேசினர்.

  ஆர்ப்பாட்டத்தில் கடலாடி பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பிட்டுத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோர் உதவித் தொகையை வழங்க வேண்டும், கடலாடி பகுதியில் நிலவிவரும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும், நரிப்பையூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மக்களுக்கு பயன்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், நரிப்பையூர் கடற்கரை சாலையை பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

  முடிவில் வட்ட துணைச்செயலாளர் அபுபக்கர் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai