Enable Javscript for better performance
சாயல்குடி வீரமாகாளி கோயில் பொங்கல் விழா- Dinamani

சுடச்சுட

    

    சாயல்குடி வீரமாகாளி கோயில் பொங்கல் விழா

    By முதுகுளத்தூர்,  |   Published on : 11th October 2014 12:43 AM  |   அ+அ அ-   |    |  

    சாயல்குடி வீரமாகாளி கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி நகரில் அமைந்துள்ள வீரமாகாளி கோயிலில் புரட்டாசி மாதம் பொங்கல் விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு பக்தர்கள் சக்தி மாரியம்மன் கோயிலில் இருந்து வீரமாகாளி அம்மன் ஆலயத்துக்கு பால்குடம், அக்னி சட்டிகள் எடுத்துச் சென்றனர். விழாவை முன்னிட்டு இரவில் ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் மேளதாளத்துடன் நடைபெற்றன.

    பக்தர்கள் வீரமாகாளி ஆலயத்துக்கு முன் பொங்கல் வைத்து வழிபட்டு நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai