சுடச்சுட

    

    திருவாடானை ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் வெள்ளிக்கிழமை ஒன்றிய குழு தலைவர் முனியம்மாள் ராஜேந்திரன் தலைமயிலும், துணைத் தலைவர் ராமகிருஷ்ணன்,ஆணையாளர் காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் மாறன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

    கவுன்சிலர் ராஜேந்திரன்: மங்களக்குடி பகுதியில் தேவகோட்டை வட்டாணம் சாலை கடந்த சில மாதங்களுக்கு முன் விரிவுபடுத்தப்பட்டது அப்போது மின் கம்பங்கள் சாலையின் நடுவே வருவதை அகற்றாமல் உள்ளதால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

    மின்வாரிய பொறியாளர் யோகானந்தம்: அப்பகுதியில் தொலைத் தொடர்பு துறையினர்,குடிநீர்வடிகால் வாரியத்தினர் பணிகள் உள்ளதால் தாமாதம் ஏற்படுகிறது.

    கவுன்சிலர் பழனிச்சாமி:தினைகாத்தான்வயல் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 35 மாணவர்கள் படித்து வரும் நிலையில் இரண்டு ஆசிரியர் பணிபுரிய வேண்டிய இடத்தில் ஒரு ஆசிரியர் மட்டுமே பணிபுரிகிறார் இதனால் மாணவர்கள் கல்வி தரம் பாதிப்படைகிறது.

    ஆணையாளர் காந்தி:சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    கவுன்சிலர் பழனிச்சாமி: தினைகாத்தன்வயல் உயர் நிலைப்பள்ளி கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் மாணவர்கள் படித்து வருகின்றனர் புதிய கட்டிடம் வேண்டும்.

    ஆணையாளர் காந்தி: மாவட்ட நிர்வாகத்திடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும்.

    கவுன்சிலர் மகாலிங்கம்: தற்போது விவசாயப் பணிகள் நடைபெற்று வருகிறது. களைகொல்லி மருந்து மானியத்தில் கிடைக்கவில்லை.

    வேளாண் அதிகாரி நாகராஜ்: போதுமான களைகொல்லி இருப்பு உள்ளது. அனைத்து விவசாயிகளும் 50சதவீத மானியத்தில் பெற்று கொள்ளலாம்.ரூபாய் 10ஆயிரம் மானியத்தில் டீசல் தண்ணீர் மோட்டார் பெற்று கொள்ளலாம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai