சுடச்சுட

    

    பாம்பனில் மூன்றாவது நாளாக 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

    By ராமேசுவரம்,  |   Published on : 11th October 2014 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதையொட்டி பாம்பனில் மூன்றாவது நாளாக இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    வங்கக் கடலில் அந்தமான் தீவுப்பகுதி அருகே அக்டோபர் 7 ஆம் தேதி கடலில் காற்றழுத்த தாழ்வுநிலைகள் உருவாகி அது புயலாக மாறி மையம் கொண்டதையொட்டி, தமிழக கடலோரப் பகுதியான பாம்பன் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. அதனைத் தொடர்ந்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அக்டோபர் 7 ஆம் தேதி 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடலில் காற்றின் வேகம் அதிகரித்ததையொட்டி அப்பகுதியில் வசிக்கும் மீனவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் அக்டோபர் 8 ஆம் தேதி இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு மீண்டும் ஏற்றப்பட்டது. மேலும் கடலில் காற்றின் வேகம் மாற்றம் அடையாததையொட்டி மூன்றாவது நாளாக வெள்ளிóக்கிழமை மீண்டும் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டு மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இரவு பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், கடலோரப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள், மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai